டில்லி

டில்லி உயர்நீதிமன்றம் இணைய தள விற்பனையில் இருந்து போலி கடிகாரங்களை நீக்க உத்தரவிட்டதில் டைட்டான் நிருவனம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

இணைய தளம் மூலம் அனைத்துப் பொருட்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக  டிவி, உள்ளிட்ட பெரிய பொருட்களில் இருந்து கைக்கடிகாரம் போன்ற சிறிய பொருட்கள் வரை பல பொருட்களை மக்கள் இணையதளம் மூலம்  பெருமளவில் வாங்கி வருகின்றனர்.  இவ்வாறான இணைய தளங்களில் முன்னணி தளங்களில் ஸ்னாப் டீல் ஒன்றாகும்.

ஸ்னாப்டீல் உள்ளிட்ட பல இணைய தளங்களிலும் ஒரு சில டைகளிலும் டாடா நிறுவனத்தின் டைடான் மற்றும் ஃபாஸ்ட் டிராக் ஆகிய பெயர்களை கொண்ட கைக்கடிகாரங்கள் மலிவான விலையில் விற்கப்பட்டு வந்தன.   இந்த போலிக் கைக்கடிகாரங்களால் டைட்டனின் விற்பனை மட்டுமின்றி நற்பெயரும் கெடுவதாக் கூறி இந்த தளங்கள் மற்றும் கடைகள் மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் டாடா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் இவ்வாறு டைட்டனின் பெயர் கொண்ட போலிக் கடிகாரங்கள் விற்பதை நிறுத்த ஸ்னாப்டீல் உள்ளிட்ட தளங்களுக்கு உத்தரவிட்டது.   அத்துடன் இந்த போலி கைக்கடியாரங்களை உடனடியாக விற்பனையில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இந்த உத்தரவுக்குப் பிறகு இணைய தளங்களில் இருந்து இத்தகைய போலி நிறுவன கடியார விற்பனை நிறுத்தப்பட்டது.

இதை ஒட்டி டைட்டான் நிறுவனம் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.  சமீப காலமாக இது போல் தங்கள் கடிகாரப் பெயர்களில் பல போலிகள் விற்கப்படுவதாகவும் அதைத் தடுக்க தாங்கள் எடுத்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தங்களுக்கு மன ஆறுதலையும் மகிழ்வையும் அளிப்பதாக டைட்டான் நிறுவன தலைமை அதிகாரி ரவி காந்த் தெரிவித்துள்ளார்.