டில்லி:
காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டு வந்த சிறப்புச்சட்டம் 370 மற்றும் 35ஏ பிரிவு வாபஸ் பெறப்படு வதாக மக்களவையில் அமித்ஷா அறிவித்து உள்ளார்.
காஷ்மீரில் நீடித்து வரும் பதற்றம் குறித்து நேற்று அமித்ஷா தலைமையில் உயர்மட்டக்குழு கூட்ட ஆலோ சனையை தொடர்ந்து, இன்று பிரதமர் மோடியின் இல்லத்தில் காலை அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் காஷ்மீர் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாராளுமன்ற மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீரில் சிறப்புச்சட்டம் 370 மற்றும் 35ஏ பிரிவு வாபஸ் பெறப்படுவதாக அறிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.