திருவனந்தபுரம்:
குடித்துவிட்டு அதிவேகமாக காரை ஓட்டி வந்த இளம் ஐஏஎஸ் அதிகாரியின் கார் இரு சக்கர வாகனத்தில் வந்த பத்திரிகையாளர் மீது மோதி, அருகிலுள்ள சாலையோர கம்பத்தில் மோதியது. இதில், பத்திரிகையாளர் பஷீர் காரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் பஷீர் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, குடித்து விட்டு அதிவேகமாக காரில் வந்த இளம் ஐஏஎஸ் அதிகாரியின் கார் மோதியதில் பலியானார். இதைக் கண்ட பொதுமக்கள் பலர் கார் கண்மண் தெரியாமல் வேகமாக வந்ததாகதெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐஏஎஸ் அதிகாரியன் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel