இந்தியன் 2 பட்ஜெட் அதிகம் என்று கூறி லைகா நிறுவனம் பிரச்சனை செய்வதாக தகவல்கள் வெளியாகின. லைகா ஒத்துவராவிட்டால் வேறு யாரையாவது வைத்து படத்தை எடுக்க திட்டமிட்டார் ஷங்கர். இந்நிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஷங்கர், லைகா இடையே சமரசம் ஏற்பட்டது.
ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது..
இந்த படத்தில் ஏற்கனவே காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் 🤝இணைந்தனர்.
இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.