டில்லி:

சிக்கன், முட்டையை சைவமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சிவசேனா கட்சியைச்சேர்ந்த  எம்.பி சஞ்சய் ரவுத் மாநிலங்களவையில் கோரிக்கை வைத்துள்ளார். இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

மாநிலங்களவையில்  ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய மருத்துவ முறைகள் அடங்கிய ஆயுஷ் அமைச்சகத்தின் திட்டங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய சிவசேனா எம்.பி., சஞ்சய் ரவுத், சிக்கன் மற்றும் கோழி முட்டையை சைவமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து பேசியபோது, தான்  ‘‘நந்தர்பார் பகுதிக்கு உள்பட்ட கிராமம் ஒன்றுக்கு சென்றபோது, அங்குள்ள பழங்குடியினர் தனக்கு ஆயுர்வேத சிக்கன் அளித்தனர். இது  உடல் உபாதைகளுக்கு அது தீர்வளிக்கும் என்றும் கூறினர்’’  என்பதை நினைவு கூர்ந்தவர்,  ஆயுர்வேத உணவுகளை கோழிகளுக்கு கொடுத்தால் கோழி ஆயுர்வேத முட்டைகளை தரும், இதன் காரணமாக கோழியை ஆயுர்வேத உணவாகக் கருதலாம், அது ஒரு சைவ உணவு உண்பதற்கு ஏற்றது, ஏனெனில் ஆயுர்வேத முட்டையிடும் கோழிக்கு ஆயுர்வேத உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, இதை சைவமாக கருதலாம். என்று தெரிவித்தார்.

சஞ்சய் ரவுத்தின்  பேச்சு ராஜ்யசபாவில் சிரிப்பலைகளை ஏற்படுத்திய நிலையில்,  சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. பலர் அவரது கருத்தை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பீஃப் உணவை மஷ்ரூம் (காளான்) உணவு என்று மாற்றுங்கள் என்று ஒருவர் கூறி உள்ளார்.

அதுபோல மட்டன், பீஃப் உணவுகளையும் வெஜிட்டேரியன் என வகைப்படுத்தலாமே பலர் விமர்சித்து உள்ளனர்.