
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’.
இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
வானின் இருள் என்ற பாடலை தீ பாட, உமா தேவி அந்த பாடலை எழுதியுள்ளார். மற்றொரு பாடலனா ஈடிஎம் என்ற பாடலை நாகர்ஜூனா என்பவரும் யூனோ என்பவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
இந்நிலையில் இந்த படம் குறித்து பா.விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் யுவனுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், யங் மேஸ்ட்ரோ யுவனுடன் ஒரு எனர்ஜிடிக் சந்திப்பு. வினோத்தின் நேர்கொண்ட பார்வைக்காக” என்று பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel