டில்லி
தொழிலாளர் நலச் சட்டங்களான 13 சட்டங்களையும் ஒரே விதியின் கீழ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் தற்போது 13 தொழிலாளர் நலச் சட்டங்கள் உள்ளன. இவை அனைத்தையும் 4 பிரிவுகளாக மாற்றி அவைகளை ஒரே விதியின் கீழ் கொண்டு வர அரசு முடிவெடுத்தது. அவ்வகையில் ஊதியம், மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு பிரிவுகளுக்கு அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் வழங்கி உள்ளது. தற்போது இந்த பிரிவுகள் அனைத்தையும் ஒரே விதியின் கீழ் கொண்டு வர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து அறிவித்த மத்திய தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்குவார், “இந்த விதி துறைமுகம், சுரங்கம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஒரே ஒரு தொழிலாளர் இருந்தாலும் கடை பிடிக்க வேண்டும். இந்த விதியின் படி அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி உறுதி அளிப்பு உள்ளிட்டவைகள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன.
இந்த விதி பணியாள்ர்களை அமர்த்த ஒரே உரிமம் என்னும் அடிப்படையில் வேலை வாய்ப்பு அளிப்பதை எளிமையாக்கி உள்ளது. அத்துடன் அனைத்து பணியாளர்களுக்கும் வேலை நியமன உத்தரவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊதியம் மற்றும் ஊதியம் வழங்கும் தினம் குறித்து நிர்ணயம் செய்ய வசதி உண்டாகும்.
தற்போது ஊழியர்களுக்கு குறைந்த பட்ச தினசரி ஊதியம் ரூ. 50 அல்லது ரூ.60 ஆக உள்ளது. இனி இந்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.178 ஆக உயர்த்தப்பட் உள்ளது. மாநிலங்கள் விரும்பினால் இந்த குறைந்த பட்ச ஊதியத்தை மேலும் அதிகரித்து சட்டம் இயற்றலாம். அத்துடன் இரவு 7 மணிக்கு மேல் பெண்களை பணியில் அமர்த்தினால் அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.