[embedyt] https://www.youtube.com/watch?v=um7id1A54SA[/embedyt]
அத்தியாயம் – 2
இப்பணியைச் செய்வதன் நோக்கம் – இஃதை மேற்கொள்வதில் உள்ள திறமையின்மையும், துணிவின்மையும் – காரசார விவாதம் – குறிப்பிடக்கூடியதும் முனிவருடைய பட்டமுமான ஹேமத்பந்தை வழங்குதல் – குருவின் அவசியம்.
தம்முடைய மராத்தி மூலநூலின் கடைசி அத்தியாயத்தில் இப்பணியைச் செய்வதற்கு அடிகோலிய காரணங்கள், இதைப் படிப்பதற்குத் தகுதியுடையவர்கள் முதலிய வேறுபல அம்சங்களையும் எடுத்துச் சொன்னார். இந்த அத்தியாயத்திலும் அதையே குறிப்பிடத் தொடங்குகிறார்.