ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் ஜோதிகாவும், கார்த்தியும் அக்கா-தம்பியாக நடிக்கின்றனர். இந்த படத்தில் சத்யராஜ், நிக்கிலா விமல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வியாகாம்18 ஸ்டூடியோஸ் மற்றும் பேரலெல் மைன்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

சஸ்பன்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் வரும் அக்டோபர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்திருப்பதாக ஒளிப்பதிவாளர் ஆர்டி.ராஜசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.