ஆக்ரா:

த்தரபிரதேச மாநிலத்தில், யமுனா விரைவு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தில் இருந்து  கால்வாய்க்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் பஸ் பயணிகள் 29 பேர் பரிதாபமாக பலியானர்கள். மேலும்  பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் ஆக்ரா நகரில் ஆவாத் டெப்போவில் இருந்து  பஸ் ஒன்று டில்லிக்கு சென்றுகொண்டிருந்தது. அநத் பஸ்சில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. பஸ் யமுனா எக்ஸ்பிரஸ் புறவழிச்சாலையாக வேகமாக சென்று கொண்டி ருந்தது. பஸ் பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது,  திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தை உடைத்துக்கொண்டு கால்வாய்க்குள் பாய்ந்து கவிழ்ந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும்,  உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீட்பு பணிகளை தொடங்கினர். இந்த கோர விபத்தில்  29 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தர பிரதேச முதல் மந்திரி ஆதித்யநாத், பயணிகள் உயிரிழந்ததற்கு தனது வருத்தத்தினையும், இரங்கல்களையும் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தோருக்கு அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]