கோவை:
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது 16வயது காதலியை, காதலன் உள்பட 6 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாசி பாலியல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட உள்ளனர். இந்த நிலையில், பொள்ளாச்சி அருகே பாட்டியின் பராமரிப்பில் வசித்து வரும் 16வயது இளம் பெண்ணை, அவரது காதலன் உள்பட உள்பட 6 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பலாத்கார கொடுமையில் இருந்து தப்பித்து வந்த 16 வயது சிறுமி ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்து வந்தார். இவரது தாயார் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவரது தந்தை வேறு மணம் செய்துகொண்டு வெளியூருக்கு சென்று விட்டார். அந்த சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்தார்.
இந்த சிறுமிக்குக்கு பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் காலதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுமியின் காதலன், அவரை தன்னுடைய வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். அதன்படி சிறுமி அங்கு சென்றுள்ளார்.
இருவரும் அங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, அவரது காதலனின் நண்பர்கள் 5 பேர் வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் 6 பேரும் கும்பலாக சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.
அந்த கும்பலிடம் இருந்து தப்பிய ஓடி வந்த சிறுமி, இதுகுறித்து தனது உறவினர்களிடம் கூறினார். அதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
காவல்துறையினர் விசாரணை நடத்தி சிறுமியின் காதலன் உள்பட 6 பேரை இரவு கைது செய்தனர். அவர்களிடம் தொடந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர்களின் பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இந்த சம்பவம் பொள்ளாச்சியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.