நியூயார்க்: பார்க்கிங் விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை பள்ளி மாணாக்கர்களுக்கான பென்சில், பேனா மற்றும் பேப்பர்களின் வடிவில் வழங்குவதற்கான நடைமுறையை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகர கவுன்சில் கொண்டுவந்துள்ளது.
இதுதொடர்பான வாக்கெடுப்பில் இத்தீர்மானம் முழு மனதுடன் ஆதரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுசம்பந்தமான பத்திரிகை செய்தி வெளியீடும் நகர கவுன்சில் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதகாலமாகவே இந்தத் திட்டம் நகர கவுன்சிலின் எண்ணத்தில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு நபர், தான் செலுத்த வேண்டிய அபராதத் தொகைக்கு சமமாகவோ அல்லது அதைவிட கூடுதலாகவோ பள்ளி மாணாக்கர்களுக்கான நன்கொடையை வழங்கலாம்.
இவற்றுள் பென்சில்கள், பேனாக்கள், அழிப்பான்கள், உலர்ந்த அழிப்பு குறிப்பான்கள், குறியீடு அட்டைகள், பேப்பர் துண்டுகள், காப்பி பேப்பர்கள், கத்தரிக்கோல், துடைப்பான்கள் உள்ளிட்ட பல்வேறான பொருட்கள் அடக்கம்.
அபராதம் விதிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் இந்த நன்கொடையை சம்பந்தப்பட்டவர் வழங்கிட வேண்டும் மற்றும் விதிமுறைகளை மீறாத வகையிலும் இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.