ஸ்ரீவில்லிபுத்தூர்:

ல்லூரி பெண்களை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளிவந்துள்ள அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி, ‘லெகின்ஸ் டாப்புடன்’ புதுகெட்டப்பில் கோர்ட்டில்  விசாரணைக்கு ஆஜரானார். அவரது மாற்றத்தைக் கண்டு பொதுமக்கள், வழக்கறிஞர்கள் உள்பட அனைவரும் வியந்தனர்.

புதிய தோற்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவி

அருப்புக்கோட்டை தேவாங்கல் கல்லூரி பேராசிரியையான நிர்மலாதேவி, கல்லூரி பெண்களை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஒரு வருடமாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது ஜாமின் வழக்கு பல முறை நிராகரிக்கப்பட்டது. அவர் கோர்ட்டுக்கு வரும்போது செய்தியாளர்கள் உள்பட ஏராளமானோர் கூடி நின்று அவரை வேடிக்கை பார்ப்பது சகஜம்.

பின்னர் அவர் மீதான விசாரணையில்  நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. தற்போது அவர்மீதான வழக்கு  ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

வழக்கு விசாரணைக்காக நிர்மலா தேவி தனியாக கோர்ட்டுக்கு வந்திருந்தார். இதுவரை சேலையில் வலம் வந்த நிர்மலா தேவி, நேற்றைய கோர்ட்டு விசாரணைக்கு , லெகின் டாப்புடன் மல்லிகைப்பூ மணமணக்காக,கழுத்தில் முத்துமாலை அணிந்த நிலையில் வித்தியாசமான தோற்றத்தில் வந்திருந்தார்.

செல்போனை பேசியபடியே விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த நிர்மலா தேவை, விசாரணை முடிந்ததும் தனியாகவே கோர்ட்டை விட்டு வெளியே வந்து வாடகை காரில் சென்றலார். ஆரம்பத்தில் அவரது தோற்றத்தை கண்ட பலர் இது வேறு யாரோ  என்று நினைத்திருந்த வேளை யில் அருகில் சென்று பார்த்தபோதுதான், அவர் நிர்மலா தேவி என தெரிய வந்ததாக தெரிவித்து உள்ளனர்.

பழைய மற்றும் புதிய தோற்றத்தில் நிர்மலாதேவி

நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, நிர்மலாதேவி, மற்றும் வழக்கில் தொடர்புடைய உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் ஆஜரானார் கள்.

பின்னர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மதுரை ஐகோர்ட் கிளையில் ஜூலை 1ம் தேதி இந்த வழக்கில் உள்ள தடை ஆணை குறித்த விசாரணை வருவதாக தெரிவித்த நிலையில், வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 8-ம் தேதிக்கு  ஒத்தி வைக்கப்பட்டது.

அன்றைய தினம் வழக்கு விசாரணையில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஒரு வருடம் ஜெயில் வாழ்க்கை முடிந்து, 3 கட்டை பைகளுடன் ஜெயிலை விட்டு வெளியே வந்த நிர்மலாதேவி தோற்றத்தை பார்த்திருந்த பலர், தற்போது அவரது நடை, உடை, பாவனை மாறி, சோகத்தை மறந்து புன்னகையுடன் இளமையான தோற்றத்துடன் வந்ததை கண்டதும் ஆவென வாயை பிளந்தனர்.

போட்டோ உதவி: நக்கீரன்