டோக்கியோ :
ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஜம்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வை சந்தித்து பேசினார்.
14வது ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஒசாகாவில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஜப்பான் பிரதமரை சந்தித்து பேசினார்.
அப்போது, ஜப்பான் உடனான இருதரப்பு உறவுகள் குறித்து ஷின்சோ அபே உடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட இந்திய உயரதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே, அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் பங்கேற்றார்
.இந்த சந்திப்பில் பயங்கரவாதம், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. பேச்சுவார்த்தையில் ஜப்பான் பிரதமர் மீண்டும் இந்திய பிரதமர் மோடியின் லோக்சபா வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும், ”அடுத்து எனது முறை.எனது இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்,” என்று சின்ஷோ அபே கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.