29வயதான டெஸ்மன்ட் அமீஃபா என்ற  இளைஞர்  Nintendo என்ற  விளையாட்டுகளை விளையாடி, விமர்சித்து வந்த அவர்   வீடியோ தளங்களில் மிக பிரபலமானவர் யுடியூப்,  டுவிச் , டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் ஆயிரக்கணக்கான வாசகர்களை பெற்று அமெரிக்காவில் பிரபலமான யுடியூப் பதிவராகவும் இருந்தவர்  ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போன அவரை இறந்த நிலையில் கண்டறிந்துள்ளனர்

அவர் காணாமல் போவதற்கு முந்தைய நாள் பதிப்பிக்கப்படாத ஒரு காணொலி ஒன்றினை அவர் பதியாமல் விட்டுள்ளார் எட்டு நிமிட வீடியோவில் தற்கொலை செய்வதற்கான எண்ணத்துடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக அதே சமூக ஊடகங்களின் வழியாக காணாமல் போன அமீஃபா வை கண்டறிய அவரின் புகைப்படத்துடன்  வெளியிட்ட காவல்துறை அவரை எங்காவது பார்த்தால் போலீசுக்கு தகவல் கொடுக்கச்சொன்னது

இந்நிலையில் கடந்த திங்களன்று தெற்கு மான்ஹாட்டன் பகுதியில் நீரில் ஒரு உடல் மிதந்து கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கே விரைந்த போலீசார் தீவிர விசாரணைக்குப் பின்  காணாமல் போன  அமீஃபா இறந்துள்ளது என்பதை கண்டறிந்தனர்

அவரின் கடைசி காணொலி ஒன்றில்

Social media “can give you an image of what you want your life to be and get blown completely out of proportion,” he says in the video. “It consumed me.” என்றும் தெரிவித்துள்ளார்.

அதாவது சமூக வலைத்தளங்கள் அவரின் வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

இன்றோ யுடியூப் ஆவது பரவாயில்லை, இன்றோ அதைத்தாண்டி பல விதமான செயலிகளை நம்மை ஆட்கொள்ள கிளம்பிஉள்ளன என்பதையும் நாம் மறக்கக்கூடாது. டிக்டாக், Vigo Video, Bigo Live, ஹெலோ போன்ற பல ஊடகங்கள் நம்மையும் நம் நேரத்தையும் எடுத்துக்கொள்ள வந்து கொண்டுள்ளன. எனவே உங்கள் நேரத்தை எந்த செயலியும் அதிகமாக எடுத்துக்கொள்ள படி உங்களை நீங்கள் கட்டமைத்துக்கொள்ளுங்கள்

அளவோடு இருந்தால் எல்லாம் அமிர்தம், அளவுக்கு மீறினால் எல்லாமே நஞ்சு

-செல்வமுரளி