திருப்பதி
புதியதாக பதவி ஏற்றுள்ள ஆந்திர அரசு திருப்பதி தேவஸ்தானத்தில் முழுமையாக மாற்றம் செய்ய உள்ளது.
இந்தியாவில் புகழ்பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் உள்ளிட்ட சில கோவில்களை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகின்றது. இந்த தேவஸ்தானத்தில் நிர்வாகத்தை நடத்த தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் நியமிக்கப்படுகின்றனர். தற்போது ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அக்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
இந்த புதிய அரசு பதவி ஏற்றபிறகு திருப்பதி தேவஸ்தான உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் மாற்றப்படலாம் என செய்திகள் வந்தன. இந்த தேவஸ்தான உறுப்பினர் சுதா மூர்த்தி, தலைவர் பட்டா சுதாகர் யாதவ் உள்ளிட்டோர் பதவி விலகினார்கள். அதன் பிறகு தலைவராக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினரான சுப்பா ரெட்டி நியமிக்கப்பட்டார்.
தற்போது இந்த தேவஸ்தான குழுவில் முழுமையான மாறுதல் செய்ய ஆந்திர அரசு உத்தேசித்துள்ளதாக தகவ்லகள் வெளியாகி உள்ளன. அதன்படி இந்த மாத இறுதிக்குள் புதிய உறுபினர்களை மாநில் அரசு நியமனம் செய்ய உள்ளது. தற்போதைய தேவஸ்தான நிர்வாக அதிகாரியான அனில் குமார் சிங்கால் என்பவரின் பதவிக்காலம் நீட்டிக்கபட உள்ளது.
திருமலை மற்றும் திருப்பதி கோவில்களுக்கு புதிய இளைநிலை நிர்வாக அதிகாரிகள் தனித்தனியாக நியமிக்கபட உள்ளனர். கூடுதல் இளைநிலை நிர்வாக அதிகாரியாக தாமா ரெட்டி என்னும் இந்திய பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட உள்ளார். இவர் ஏற்கனவே திருமலையில் இளைநிலை நிர்வாக அதிகாரியாக இருமுறை பணி புரிந்துள்ளார்.