மும்பை
மகாராஷ்டிராவில் உள்ள நான்கு அணைகளில் மிதக்கும் சூரியஒளி மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மகாராஷ்டிராவில் வார்தா, பிபாலா, கடக்புமா மற்றும் பெண்டகி ஆகிய நான்கு பெரிய அணைகள் உள்ளன. இவை அனைத்தும் கடற்கரை ஓரம் முகத்துவாரத்துக்கு மிக அருகே அமைந்துள்ளன. மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை மேலவையில் இந்த அணைகள் குறித்து கேள்வி ஒன்றை தேசிய வாத காங்கிரஸ் உறுப்பினர் ஹேமந்த் கேட்டார்/
இதற்கு பதில் அளித்த மகாராஷ்டிர நீர்வளத்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன், “மகாராஷ்டிர மாநிலத்தில் அணைகளுக்கு மேல் சூரிய ஒளி மூலம் மின்சாரம் அமைக்கும் நிலையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையங்கள் சுமார் ரூ.4.45 கோடி செலவில் உருவாக உள்ளது. இவை 500 மெகாவாட் திறன் கொண்டதாகும்.
இந்த மிதக்கும் நிலையங்கள் வர்தா, பிபாலா, கடக்புமா மற்றும் பெண்டகி ஆகிய அணைகளின் மேல் அமைக்கப்பட உள்ளன. இதற்காக விதர்பா நீர்ப்பாசன மேம்பாட்டு ஆணைய இயக்குனர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. அந்த குழு விரைவில் இந்த பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோர திட்டமிட்டுள்ளது” என தெரிவித்தார்.