ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , லைகா தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடிக்கும் படம் ‘தர்பார்’ . சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்குறார்.
இந்தப் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் ப்ரதீக் பப்பார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். வின்னைத்தாண்டி வருயாயாவின் இந்தி பதிப்பில் நடித்தவர் இந்த பாலிவுட் நடிகர் ப்ரதீக் பப்பர், இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகனாக நடிக்கிறார்.
தர்பரின் படப்பிடிப்பு தற்போது மும்பையிலும் அதைச் சுற்றியும் நடந்து வருகிறது. நடிகர் ப்ரதீக் பப்பர் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பைத் தொடங்கினார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஒரு விமான நிலையத்தின் பக்கமிருந்து எடுக்கப்பட்ட படம் அது .
மேலும் ஜிம்மில் இருந்து சில வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.