ரியாத்

னது 13 வயதில் கைது செய்யப்பட்ட முர்தாஜா குவெறிஸ் என்பவருக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் ஷியா என்னும் சிறுபான்மை பிரிவை சேர்ந்த முர்தாஜா குவெறிஸ் என்பவன் 2014 ஆம் வருடம்  கைது செய்யப்பட்டான்.  அவனுக்கு அப்போது 13 வயதாகும்.   முதலில் 12 ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டு அல் தமான் சிறையில் அடைக்கப்பட்ட அவன் 16 வயது நிறம்பியதும் பெரியவர்கள் சிறைக்கு மாற்றப்பட்டு வழக்கு மீண்டும் தொடரப்பட்டது.

குவெறிஸ் தேச விரோத குற்றம் புரிந்ததால் அவனுக்கு தீவிரவாத தடை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.   அத்துடன் தூக்கிடப்பட அவனது உடலை பொது வெளியில் தொங்க விடப்பட வேண்டும் எனவும் தீர்ப்பில்  கூறாப்பட்டிருந்தது.   இதை ஒட்டி மனித உரிமை ஆர்வலர்கள் இந்த தீர்ப்ப்புக்கு எதிராக அரசிடம் மனு அளித்தனர்.

முதலில் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த சவுதி அரசு அதன் பிறகு மரண தண்டனையை ரத்து செய்துள்ளது.   ஆனால் குவெறிஸ் கைது செய்யபட்ட போது அளிக்கப்பட்ட 12 ஆண்டு தீர்ப்பை உறுதி செய்தது.   குற்றம்  புரிந்த போது அவன் 10 வயது சிறுவன் என்பதால் அவனுக்கு அரசு தனடனைக்காலத்தில் 4 வருடம் தள்ளுபடி செய்துள்ளது.  தற்போது குவெறிஸ் வரும் 2022 ஆம் வருடம் விடுதலை செய்யப்படுவான் என அரசு தெரிவித்துள்ளது.