புதுச்சேரி
விக்கிரவாண்டி தொகுதியின் சட்டப்பேரவை திமுக உறுப்பினர் ராதாமணி மரணம் அடைந்தார்.
விக்கிரவாண்டி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ராதாமணி ஆவார். இவர் திமுகவை சேர்ந்தவர் ஆவார். இவருடைய சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் உள கலிஞ்சிக்குப்பம் என்னும் சிற்றூர் ஆகும்.
சுமார் 69 வயதாகும் ராதாமணி திமுக மாவட்ட அவைத்தலைவர் பதவி வகித்து வருபவர ஆவார். இவர் உடல நலக் குறைவு காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் ராதாமணி மரணமடைந்தார். ராதாமணியின் மறைவு திமுக வினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.