லண்டன்:

ண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய தொழிலதிபர்  நிரவ் மோடி,  ஜாமின் கோரி 4வது முறையாக தாக்கல் செய்த மனுவையும் லண்டன் நீதிமன்றம் நிராகரித்து உள்ளது.

ஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கிவிட்டு லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வந்த குஜராத் வைர வியாபாரியான நிரவ் மோடி, கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஏற்கனவே 3 முறை நிராகரிக்கப்பட்ட நிலை யில், 4வது முறையாகவும் ஜாமின் கேட்டு மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று லண்டன் ராயல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்க இந்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.