லண்டன்:

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானின் உடல்நிலையை இந்திய கிரிக்கெட் வாரிய டாக்டர்கள் குழு கண்காணித்து வருகிறது.


உலகக் கோப்டை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார் தவான்.

நாளை மறுநாள் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் நிலையில் தவானுக்கு காயம் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது, அவரது இடது கை ஆட்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. அவரை 3 வாரங்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் குழு அறிவுறுத்தியது.

இதனையடுத்து, தவான் உலகக் கோப்டை தொடரில் இருந்து விலகினார். இது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக கருதப்பட்டது.

ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த் அல்லது ஷ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தவானின் உடல்நிலையை இந்திய கிரிக்கெட் வாரிய டாக்டர்கள் குழு கண்காணித்து வருகிறது.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தவான் போட்டியில் தொடர்ந்து விளையாடுவாரா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தான் முடிவு செய்யவேண்டும்.

அதுவரை இங்கிலாந்தில் இருந்தபடியே அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.