டில்லி:

த்தரபிரதேச முதலமைச்சர் குறித்து அவதூறு வீடியோ பதிவிட்டதாக கைதான பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. மேலும், எந்த அடிப்படையில் பத்திரிகையாளரை கைது செய்தீர்கள் ?”  என்றும்  உ.பி அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக  எச்சரித்தது.

உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். அவரை திருமணம் செய்ய விரும்பு வதாக, கடந்த வாரம் உ.பி. முதல்வர் அலுவலகம் அருகே ஒரு பெண் கூறினார். அவர் கூறிய தகவல் தொடர்பான வீடியோவை  டெல்லியை சேர்ந்த செய்தியாளர் பிரஷாந்த் கனோஜியா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கனோஜியா விற்கு எதிராக லக்னோவில் உள்ள ஹஸ்ராத்கஞ்ச் காவல்நிலையத்தில் அவதூற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையத்து போலீசார் கனோஜியா கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 11 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர் கனோஜ் கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் உள்ள பத்திரிகை சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கனோஜின் மனைவி, உ.பி. மாநில அரசின்  கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் ஏஎஸ்ஜி பானர்ஜி, ரஸ்தோகி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஏஎஸ்ஜி பானர்ஜி, ‘எந்த அடிப்படையில் பத்திரிகையாளரை கைது செய்தீர்கள்?’கொலைக்குற்றம் செய்துவிட்டாரா; அவதூறு வழக்கிற்காக நீதிமன்ற காவலில் ஜூன் 22ந்தேதி  வைக்க அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினர். சட்டம் சரியாக உள்ளது என்று கூறினார்.

அதுபோல நீதிபதி ரஷ்தோகியும், இந்த அவதூற வழக்குக்கு 11 நாள் காவலா என்று கேள்வி எழுப்பிய நிலையில்,  கைது செய்ததை சரியானதாக கருதுகிறீர்களா? லக்னோ மாஜிஸ்திரேட் தவறான உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கில்,  பத்திரிகையாளர் கைதுக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்த நிலையில், மாநில அரசையும் கடுமையாக சாடினர்.

ஒவ்வொரு தனிநபருக்கும் தனது கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க உரிமையுள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள்,   சில நேரங்களில் சில விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டியவைதான். அதற்காக கைது செய்வீர்களா ? எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கை எடுப்பீர்களா ? என்று கேள்வி எழுப்பினர்.

கைது செய்யப்பட்ட கனோஜியாவை விடுதலை செய்யுமாறு உ.பி. மாநில அரசுக்கு  உச்சநீதி மன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  மேலும் கனோஜி மீது சட்டத்திற்கு இணங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியது.