பதான்கோட்:

த்துவா சிறுமி வன்கொடுமை கொலை: 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், முக்கிய குற்றவாளிகளான 3 பேருக்கு ஆயுள் தண்மனையும், மற்ற 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியை சேர்ந்த 8 வயதுடைய சிறுமி காமூகர்களால் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 6 பேர் குற்றவாளிகள் என்று பதான் கோட் நீதி மன்றம் இன்று காலை தீர்ப்பு கூறியது. அப்போது, பிற்பகலில் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட்டது. கத்துவா சிறுமி கொலை வழக்கில் முக்கிய ‘ற்றவாளிகளான சஞ்சீ ராம், தீபக் கஜுரியா மற்றும் பர்வீஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். மற்ற 3 பேருக்கு  5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். அத்துடன்  , தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சாஞ்ஜி ராமின் மகன் விஷால் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு பஞ்சாப் பதான்கோட்டில் சிறப்பு நீதிமன்றம்  விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் சஞ்சய் ராம், விஷால், தீபக், சுரேந்தர்,  ஆனந்த தத்தா,  ரன்பீர் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டது. இவர்கள் மீது  கடத்தல்காரர்கள், கற்பழிப்பு மற்றும் பலர் மத்தியில் சாட்சியங்கள் அழிக்கப்படுபவர்களுடன் தொடர்புடைய ஆறு பிரிவுகளின் கீழ் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது. தற்போது தண்டனை விவரம் வழங்கப்பட்டு உள்ளது.

இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதையொட்டி குற்றவாளிகள் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.   தீர்ப்பு காரணமாக, பதான்கோட் நீதிமன்ற வளாகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.