
ஜம்மு: அடுத்த மாதம் துவங்கவுள்ள அமர்நாத் யாத்திரை நிகழ்வையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விரைவு நடவடிக்கை குழுக்கள்(Quick-Reaction Teams) மற்றும் சாலை-திறப்பு குழுக்கள்(Road-Opening Parties) ஆகியவை களத்தில் செயல்படும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த யாத்திரை மொத்தம் 46 நாட்கள் காலஅளவைக் கொண்டது. இந்த யாத்திரை 2 வழிகளில் நடைபெறும். அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் வழி மற்றும் கண்டர்பால் மாவட்டத்தின் பல்டால் வழி ஆகிய இரண்டும்தான் அவை.
ஜுலை மாதம் 1ம் தேதி தொடங்கும் இந்த யாத்திரை, ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் ரக்ஷா பந்தன் திருவிழாவோடு இணைந்து நிறைவடையும். யாத்ரிகர்கள் கூடுகின்ற வரவேற்பு மையங்கள், சமூக சமையலறைகள், உதவியாளர் நிலையங்கள் மற்றும் பேஸ் கேம்ப் ஆகிய பகுதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவசர தேவைகள் ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில், டோடா, கிஷ்ட்வார், ரஜோவ்ரி, பூன்ச் மற்றும் ரீசி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]