
அகமதாபாத்: குடும்ப உறுப்பினர்கள் தன்னை பெரிதாக கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பு செய்ததால், பெண் பல் மருத்துவர் ஒருவர் தனது அண்ணன் மற்றும் அவரின் 14 மாத மகளை விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.
கின்னாரி படேல் என்ற அந்த 28 வயது பெண்தான் இந்த கொடுமையான செயலை செய்துள்ளார். அவரின் குடும்பம் அகமதாபாத்தில் வசித்து வருகிறது.
கின்னாரியின் சதோரரான 32 வயது ஜிகார் படேல் கடந்த மே மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். அவரின் 14 மாத பெண் குழந்தை மே 30ம் தேதி இறந்தது. ஆனால், இந்த 2 மரணங்களிலும் எந்தவித கவலையுமின்றி சகஜமாக இருந்துள்ளார் கின்னாரி படேல்.
எனவே, குடும்பத்தினருக்கு சந்தேகம் வந்து அவரிடம் விசாரித்ததில், குடிநீரில் விஷம் கலந்து இருவரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரின் மீது புகார் கொடுக்கப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத்தில் தான் தொடர்ந்து உதாசீனம் செய்யப்பட்டதால், தாழ்வு மனப்பான்மை உருவாகி இந்த கொடும் செயலை கின்னாரி மேற்கொண்டுள்ளதாக விசாரணையின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
[youtube-feed feed=1]