டில்லி:

காங்கிரஸ் கட்சியின் சில மாநிலங்களில் எழுந்துள்ள ஒழுங்கின்மையை இரும்புக்கரம் கொண்டு ராகுல் காந்தி அடக்க வேண்டும் காங்கிரஸ் மூத்த தலைவர்  வீரப்பமொய்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் தோல்வி குறித்து நடை பெற்ற காரிய கமிட்டி ஆலோசனை கூட்டத்தில், மூத்த காங்கிரஸ் தலைவர்களின் மிரட்டல்களை பகிரங்கமாக சாடினார். லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப் பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி விலகுவதாக அறிவித்தார்.  ஆனால், அவரது பதவி விலகலை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில்,  மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து, கட்சியின் தலைமைக்கு எதிராக சில மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளதாகவும், இது கட்சியின் ஒழுங்கை பாதித்திருப்பதாகவும்  கூறிய வீரப்ப மொய்லி, காங்கிரஸ் கட்சிக்கு  சோனியா காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்றபோதும் இது போன்று எதிர்ப்பு குரல் எழுந்தது. ஆனால், , அதை சோனியா திறம்பட சமாளித்தார், அதுபோல ராகுல்காந்தியும்  கட்சியினரின் ஒழுங்கின்மையை அவர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும், ராகுல் பதவி விலகுவதாக கூறினாலும், தற்போது வரை அவர்தான்  தலைவராக நீடித்து வருகிறார் என கூறிய  மொய்லி, காங்கிரசின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் ராகுல் காந்தி உறுதியாக இருந்தால், அதற்கு முன்பாக நேர்மையான, உறுதியான ஒருவரின் தலைமை பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.