லாகூர்: மும்பை தாக்குதலின் சூத்திரதாரி என்று கருதப்படுபவரும், ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவருமான ஹஃபீஸ் சயீத், ஆண்டுதோறும் லாகூர் நகரில் ரமலான் தொழுகையை நடத்தும் அவருக்குப் பிடித்தமான கடாஃபி மைதானத்தில் இந்தாண்டு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த மைதானத்தில் ஆண்டுதோறும் ரமலான் தொழுகையை தலைமையேற்று நடத்துவார் ஹஃபீஸ் சயீத்.
இவரின் இயக்கம் அமெரிக்காவில் பயங்கரவாத இயக்கமாக பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் கட்டளையை மீறினால் ஹஃபீஸ் சயீத் கைது செய்யப்படுவார் என்ற நிலை இருந்தது.
எனவே, அதற்கு பதிலாக, அவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மசூதியிலேயே ரமலான் தொழுகையை நடத்த வேண்டியதானது.
ஹஃபீஸ் சயீத் கடந்த பல்லாண்டுகளாகவே, ஈத் உல் பித்ர் மற்றும் ஈத் உல் ஆஸா ஆகிய நாட்களுக்கான பிரார்த்தனைகளை கடாஃபி மைதானத்திலேயே எந்தவித தடங்கலுமின்றி நடத்திவந்தார் என்பது கவனிக்கத்தக்கது.