புதுடெல்லி: இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளிடையே பிரஹ்மோஸ் ஏவுகணை தயாரிப்பு ஒத்துழைப்பு தொடக்க முதலீடாக ரூ.1300 கோடிக்கு தொடங்கப்பட்டு, தற்போது ரூ.40000 கோடி என்ற அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஏவுகணை நிலம், ஆகாயம் மற்றும் நீரிலிருந்தும் செலுத்துவதற்கு மிகவும் ஏற்றது.

இதுதொடர்பாக பிரஹ்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவன வட்டாரத்தில் கூறப்படுவதாவது; ரஷ்யா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்த நிலையில் இந்த ஒத்துழைப்பு திட்டம் தொடங்கப்பட்டது. எனவே, அதிக ஒத்துழைப்புகளை மேற்கொண்டு இதை ரொக்கமாக மாற்ற வேண்டிய தேவை இந்தியாவிற்கு உள்ளது.

இந்தியாவின் டிஆர்டிஓ அமைப்பிற்கும், ரஷ்யாவின் என்பிஓ மஷினோஸ்ட்ரோனியாவிற்கும் இடையே கடந்த 1998ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு ஒத்துழைப்பு ஒப்பந்தமாகும் இது.

இந்த ஒப்பந்தம் தற்போது ரூ.40,000 கோடி வணிக மதிப்பாக உயர்ந்துள்ளது. இந்தவகையில், செல்வம் மற்றும் சூழலை நாம் உருவாக்கியுள்ளதாய் உறுதியாக நம்புகிறோம். இந்திய அரசுக்கு ரூ.4000 கோடிக்கும் அதிகமான பணத்தை வரிகள் என்ற வகையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொடுத்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.