மதுரை:

மிழகத்தில் உ ள்ள  கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் இன்னும் தொடர்ந்து வருவதாக வும், சுமார்  35ஆயிரம் கிராமங்களில் இன்னமும் தீண்டாமை கொடுமைகள் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் எவிடென்ஸ் அமைப்பின் தலைவர் கதிர்  வெளியிட்டு உள்ளார்.

மதுரையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில், “மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் வளர்த்தெடுப் பதில் ஊடகங்களின் பங்கு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம்  நடைபெற்றது. இதில் பேசிய எவிடென்ஸ் அமைப்பின் தலைவரான கதிர் பேசும்போது,

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சொக்கிகுளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,ஆணவக் குற்றங்களின் நிலைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கதிர், கவுரவக் கொலைகளுக்கு காரணம், பெண்களின் உடலை சாதியத் தூய்மையின் இருப்பிடமாகப் பார்க்கும் வழக்கம் ஆண்களுக்கு இருப்பது என்று தெரிவித்தவர், தமிழகத்தில்தான் கவுரவக் கொலைகள் அதிகம் நடக்கின்றன என்ற தகவலையும் தெரிவித்தார்.

மேலும், கவுரவக் கொலைகள் மூலம் 80 சதவிகிதம் தலித் சமூகம் சாராத பெண்கள் பாதிக்கப்படு கின்றனர் என்று தெரிவித்தவர்,  தலித் இளைஞர்களை திருமணம் செய்து கொண்டதாக, தலித் அல்லாத பெண்கள் தங்களது சொந்த குடும்பத்தினராலேயே கொலை செய்யப்படுகின்றனர் என்றும்,  தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 187-க்கும் அதிகமான கவுரவக்  கொலைகள் நடந்துள்ளன. இதில், 3 கொலை வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.‘

கடந்த 2014-ம் ஆண்டு கவுரவக் கொலைகள் குறித்து அனைத்து மாநிலங்களும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், 22 மாநிலங்கள் அறிக்கை தாக்கல் செய்தன. ஆனால், தமிழகம் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியவர், தமிழகத்தில்  சுமார்,  700 வகையான தீண்டாமைகள் உள்ளன என்பதையும் சுட்டிக்க காட்டினார்.

கோயில்களில் வழிபாடு தொடங்கி மயானத்தில் புதைப்பது வரை அனைத்திலுமே தீண்டாமைக் கொடுமை இருந்து வருகிறது. தமிழக அரசு வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் 300 முதல் 600 கிராமங்களில் மட்டுமே தீண்டாமை பாகுபாடு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் கிராமங்களில் சுமார் 35 ஆயிரம் கிராமங்களில் இன்னும் தீண்டாமைக் கொடுமை உள்ளது. அதை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு செய்தியாளர்களிடம் பேசிய தலித் ஒடுக்குமுறை முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சீனிவாசராவ்,   தமிழகத்தில் 1,870 கிராமங்களில் தீண்டாமை கொடுமைகள் நடைபெறுவதாக கூறியிருந்தது நினைவில்கொள்ளத்தக்கது.