சென்னை:
எந்த சக்தியாலும் மக்களின் மனதிலிருந்து காங்கிரஸ் கட்சியை அகற்ற முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா காந்திக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்னை சோனியா காந்திக்கு வாழ்த்துகள்.
சிறப்பாக பணியாற்றியுள்ள காங்கிரஸ் கட்சியை, மக்கள் மனதில் இருந்து அகற்றமுடியாது.
அரசியல் சாசனத்தின்படி, சமூக நீதி, மதசார்பின்மையை கடைபிடிப்பது காங்கிரஸ் கட்சி. ஏழை,நடுத்தர மக்களும் காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.