புதுடெல்லி:

ராணுவத்தினருக்கான குண்டு துளைக்காத ஜாக்கெட் சீனாவிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கப்படுவதாகவும், அவை தரமற்றவை என்றும் நிதி அயோக் உறுப்பினர் கூறியுள்ளார்.


நிதி ஆயோக் உறுப்பினர் விகே. சரஸ்வத் கூறும்போது, சீனாவிலிருந்து மூலப் பொருட்களை வாங்கி, இந்திய ராணுவத்துக்கான குண்டு துளைக்காத ஜாக்கெட்டை இந்திய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

இவற்றின் விலை குறைவு. ஆனால் தரம் இல்லை. இந்திய ராணுவத்துக்கு 3 லட்சம் குண்டு துளைக்காக ஜாக்கெட் தேவைப்படுகிறது.

கெட் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து இந்திய நிறுவனங்கள் பெற்று வந்தன.
தற்போது பெரும்பாலும் குண்டுதுளைக்காத உடைகள் கனமானவை. கான்பூரைச் சேர்ந்த எம்கேயூ மற்றும் டாடா அட்வான்ஸ்டு மெட்டீரியல் நிறுவனங்கள், தரமான ஜாக்கெட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றன.

இந்திய ராணுவத்தினரும் பயன்படுத்தும் கனமான ஜாக்கெட்டை தவிர்த்து, எடை குறைவான ஜாக்கெட்டை இந்திய நிறுவனங்கள் தயாரிக்கின்றன என்றார்.