புவனேஸ்வர்:
ஓடிசாவில் காட் மதராக கருதப்படும் 70 வயதான பிரமிளா பைசோய் பிஜு ஜனதா தளத்தின் எம்பி. ஆகியிருக்கிறார்.
கஞ்சாம் மாவட்டம் செரமாரியா கிராமத்தில் பிறந்த பிரமிளா ஒடிசாவில் சுய உதவிக்குழுவை கிராமந்தோறும் விரிவுபடுத்தியவர்.
பெண்களின் முன்னேற்றத்துக்காக போராடிய இவரை, ஒடிசா பெண்கள் காட் மதர் என்றே அழைக்கிறார்கள்.
இந்திய பண்பாடு, கலாச்சாரம் மாறாமல், தன் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டவர்.
பிஜு ஜனதா தளத்தின் மிஷன் சக்தி திட்டம்
2001-ல் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தை கொண்டு சேர்த்ததில் பிரமிளாவுக்கு முக்கிய பங்கு உண்டு.
பெண்கள் மத்தியில் பிரபலமான பிரமிளாவை
அஸ்கா மக்களவை தொகுதியில் வேட்பாளராக்கினார் பிஜு ஜனதா தளம் தலைவரும் முதல்வருமான நவீன் பட்நாயக்.
2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் பிரமிளா.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள தன் தொகுதிக்குட்பட்ட பகுதியை மறுசீரமைப்பதே முதல் பணி என்றார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, நவீன் பட்நாயக்குடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்ததை பெருமையாக நினைக்கிறார்.
போதிய கல்வி இல்லாவிட்டாலும், அரசியலை நன்கு அறிந்து வைத்திருக்கும் இவரிடம் செல்போன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.