ஸ்ரீநகர்: ரமலான் மாதத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில், இந்திய ராணுவத்தினர் தமது தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வேண்டுமென்ற அம்மாநில கட்சிகளின் கோரிக்கை மத்திய அரசு நிராகரித்ததானது, பலவிதமான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்த ரமலான் மாத காலகட்டத்தில் மட்டும் 23 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக படைகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்த 2019ம் ஆண்டில் இதுவரையான காலகட்டத்தில் மட்டும் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலமே, காஷ்மீர் பள்ளத்தாக்கில், ரமலானுக்கு முந்தைய இறுதி வெள்ளிக்கிழமையில் அமைதியான பிரார்த்தனை சாத்தியமாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்தமுறை இதேகாலகட்டத்தில், பாரதீய ஜனதா கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த மெஹ்பூபாவின் கட்சியின் வற்புறுத்தலால், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டதால், அந்த சமயத்தில் 11 பயங்கரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டனர். அனால், கடந்தாண்டு ஜுன் மாதம் 19ம் தேதி ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு முறிந்தது.