ரியோடிஜெனிரோ: தன்மீது சுமத்தப்பட்டுள்ள வன்புணர்வு குற்றச்சாட்டு பொய்யானது என்றும், உள்நோக்கம் கொண்டது என்றும் மறுத்துள்ளார் பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், ஒரு ஹோட்டலில் வைத்து குடிபோதையில் தன்னிடம் நெய்மர் தவறாக நடந்துகொண்டார் என்று ஒரு பெண்மணி அவரின் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.

பிரேசில் அணியின் கேப்டன் பதவியிலிருந்து கடந்த மாதம் நீக்கப்பட்ட நெய்மருக்கு இது மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும், சர்வதேச அளவில் அவரின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட பெண்ணுடன் தொடர்புடைய ஒரு வழக்கறிஞரின் சதிதான் என்று கூறியுள்ளது நெய்மரின் தரப்பு.