டில்லி:

ர் இந்தியா ஒப்பந்த ஊழல் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதை சந்தோசமாக எதிர்கொள்வேன் என்று பிரபு பட்டேல் தெரிவித்து உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல், கடந்த 2004 முதல் 2011-ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார.

அவர்மீது  கருப்பு பண குற்றச்சாட்டு, மற்றும்,  ஏர் இந்தியா நிறுவனத்தில், பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் சிபிஐயிடம் புகார் அளித்திருந்தார்.

அதன்படி,  அப்போது மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பிரபுல் படேலுக்கும், ஏர் இந்தியா முன்னாள் தலைவர் துளசிதாஸ் மீதும், ஏர் இந்தியா ஒப்பந்தத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை பிரபு பட்டேலை ஜூன் 6ந்தேதி  விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது.

பிரபுல் பட்டேல் விமான போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது,  ரூ.70,000 கோடி பெறு மான 111 விமனாங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் விமானங்கள் குத்தகை மற்றும் லாபம் தரும் வழித்தடங்களை சரண்டர் செய்தது, ஏர் இந்தியா விமான பயண நேரங்கள் மாற்றம் ஆகியவற்றில் முறைகேடுகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2005-ல் முதலில் ஏர்பஸ் ஒப்பந்தம் 43 விமானங்களுக்காக போடப்பட்டது. இன்னொரு 68 விமானங்களை போயிங்கிடமிருந்து வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.  இந்த ஒப்பந்தங்கள் ரூ.70,000 கோடி பெறுமானது என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை முன்னாள் விமானப்போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளின் வாக்குமூலங்களையும் சேகரித்து பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, தீபக் தால்வார் என்பவரை கைது செய்து விசாரணை செய்தது, தால்வார் அடிக்கடி பிரபுல் படேலுடன் தொடர்பில் இருந்ததாகவும் அமலாக்கத்துறை வழக்கில் கூறப்பட்டுள்ளது

இதுகுறித்து கூறிய பிரபு பட்டேல், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு சந்தோஷத்துடன் ஒத்துழைப்பேன் என்று கூறி உள்ளார்.