டில்லி:

க்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற கட்சி தலைவராக சோனயி காந்தி தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த விவாதத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், தேர்தலில் வென்றுள்ள மக்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா,  மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான எண்ணிக்கை இல்லாததால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற 54 உறுப்பினர்கள் தேவையான நிலையில், காங்கிரஸ் கட்சியில் 52 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதால், காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கோராது என்றும், ல் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.