சென்னை:

முதுநிலை பொறியியல் படிப்புக்கான  டான்செட் நுழைவுத்தேர்வுக்கு இதுவரை 41,142 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிஇ பொறியியல் படிப்பு கலந்தாய்வை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பக் கழகம் நடத்தும் நிலையில், உயர்நிலை படிப்பான  எம்.பி.ஏ, எம்.சி.ஏ., மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்த உயர்கல்வித்துறை பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போதைய கல்விஆண்டில்,  எம்.பி.ஏ படிப்பிற்கு 21 ஆயிரத்து 340 பேரும், எம்.சி.ஏ.விற்கு 5 ஆயிரத்து 922 பேரும், எம்.இ,எம்.டெக் உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்பிற்கு 13 ஆயிரத்து 880 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

எம்.சி.ஏ. படிப்பிற்கு ஜூன் 22ம் தேதி காலை 10 முதல் 12 மணி வரையிலும் தேர்வு நடைவெற உள்ளது.

அதுபோல, எம்.பி.ஏ. படிப்புக்கு ஜூன் 22ம் தேதி பிற்பகல் 2.30 முதல் 4.30 மணி வரையிலும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 23ம் தேதி காலை 10 முதல் 12 மணி வரையிலும் தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.