கொல்கத்தா:

தேர்தல் முடிவுக்குப் பிறகு முதல்வர் பதவியை ராஜினமா செய்ய விரும்பியதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.


மேற்கு வங்கத்தில் 22 மக்களவை தொகுதிகளில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார். கடந்த தேர்தலை ஒப்பிடும்போது, 12 தொகுதிகளை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இழந்துள்ளது.

தேர்தலுக்குப் பிறகு நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகக் கூறினேன். ஆனால் என் கட்சியினர் தடுத்துவிட்டனர்.

இந்த முதல்வர் நாற்காலி எனக்கு தேவையில்லை. ஆனால், முதல்வர் நாற்காலிக்கு நான் தேவைப்படுகின்றேன்.

என் மக்களுக்காக நான் நிறைய செய்துள்ளேன்.
தற்போது வீட்டை ஒழுங்குபடுத்த வேண்டி இருக்கிறது.
பாஜகவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை பாதுகாப்புப் படையினர் கேட்டுக் கொண்டனர்.
இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம்தான் ஆட்ட நாயகன்.
வாக்குப் பதிவு இயந்திரங்களில் கள்ள ஓட்டு போடுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருந்தன என்றார்.