சென்னை:

மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் வகையில், தமிழக முதல்வர்  ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் வரும் 28ந்தேதி டில்லி பயணமாகிறார்கள்.

மக்களவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமர் வரும் 30ந்தேதி பதவி ஏற்பார் என தெரிகிறது. இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வா் பழனிசாமி, துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் டெல்லி செல்ல உள்ளனா்.

28ந்தேதி டில்லி செல்லும் ஈபிஎஸ், ஓபிஎஸ் தொடர்ந்து 3 நாட்கள் டில்லியில் முகாமிட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களுடன் மூத்த அமைச்சர்களும் டில்லி செல்கின்றனர்.

[youtube-feed feed=1]