டில்லி

டந்த ஐந்து ஆண்டுகளாக தொழிற்சாலைகளுக்கான சுற்றுச்சூழல் விதிமுறைகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளதாக பசுமை அமைப்புக்கள் கவலை தெரிவித்துள்ளன.

புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும், புதிய சுரங்கங்கள் அமைக்கவும் மற்றும் உயர்ந்த கட்டிடங்கள் அமைக்கவும் அரசின் சுற்றுச்சூழல் பராமரிப்புத் துறையிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்பது சட்டமாகும்.   இவ்வாறு அனுமதி அளிக்க அந்த துறைக்கு பல விதிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன.   அந்த விதிமுறைகளுக்குட்பட்டு அனுமதி வழங்க வேண்டும் என்பதே சட்டமாகும்.

ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த ஐந்து வருடங்களில் இந்த விதிமுறைகள் மிகவும் தளர்த்தப்பட்டுள்ளதாக பசுமை அமைப்புகள் தெரிவித்துள்ள்ன.    இதற்கு அந்த அமைப்புக்கள் பல உதாரணங்களையும் சுட்டிக் காட்டுகின்றன.    சுமார் 25 தொழிற்சாலைகளுக்கான விதிமுறைகள் இதுவரை தளர்த்தப்பட்டுள்ளன.   இவற்றில் நிலக்கரி சுரங்கம், இரும்பு ஆலைகள்,  தொழிற்பேட்டைகள், ஆறு மற்றும் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட தொழில் துறைகள் உள்ளன.

இது குறித்து கொள்கை ஆய்வு ஆர்வலர் காஞ்சி கோலி, “ஒரு மின் உற்பத்தி நிலையம் கடலோரத்தில் அமைப்பதற்கும் மற்றும் உள்நாட்டில் அமைப்பதற்கும் வெவ்வேறு விதிமுறைகள் உள்ள்ன.  ஆனால் தற்போது அவை ஒன்றாக்கப்பட்டுள்ளன.   இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு கடுமையாகும்” என தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் வருடம் மார்ச் மாதம் 20 ஆம் தேதி சுற்றுச் சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் சுரங்க அனுமதியை புதுப்பிக்க புது சுற்றுச்சூழல் அனுமதி தேவை இல்லை என மாற்றப்பட்டது.   கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி தனிப்பட்டோர் சுரங்கம் அமைக்க குறைந்த பட்ச பரப்பளவை 5 ஹெக்டேர் ஆகவும் பெரிய சுரங்கம் அமைக்க பரப்பளவை குறைந்த பட்சம் 25 ஹெக்டேர் ஆகவும் அரசு குறைத்துள்ள்து.   இது தவறு என தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக 2017 ஆம் வருடம் மார்ச் மாதம் அனல் மின் நிலைய விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.   குறிப்பாக அனல் மின்நிலையங்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் போது ஏற்கனவே அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழே போதுமானது என மாற்றப்பட்டுள்ளது.   அத்துடன் நிலக்கரி இருப்புக்களை அதிகரிக்கவும்  புதிய அனுமதி தேவை இல்லை என விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இவ்வாறு கடந்த 5 வருடங்களாக விதிமுறைகள் தளர்த்தப்பட்டதற்கு தொழிற்சாலை நிர்வகிகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ள்னர்.  ஆனால் பசுமை ஆர்வலர்கள் இந்த விதிமுறை மாற்றங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.      ஆயினும் அரசு இவர்களுடைய எதிர்ப்பை கருத்தில் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.