டில்லி

டில்லியில் உள்ள அவுரங்கசிப் லேன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்களித்தார்.

 

மக்களவை தேர்தலில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த வாக்குப்பதிவு 7 மாநிலங்களிலுள்ள 59 மக்களவை தொகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது.

டில்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை டில்லியில் அவுரங்கசீப் லேன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு அளித்துள்ளார்.