புதுடெல்லி:
போலி விசா மற்றும் வேலை மோசடி தொடர்பான 50% புகார்கள் குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு வந்துள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அளித்த பதிலில், எங்களுக்கு 4 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன.
இதில் 50% முதல் 60% வரையிலான புகார்கள், போலி விசா மற்றும் வேலை மோசடி தொடர்பானதாகும்.
குவைத்தில் உள்ள போலி ஏஜெண்ட்களுடன் இந்தியாவில் உள்ள போலி ஏஜெண்ட்கள் சேர்ந்து இத்தகைய மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
நேர்மையான ஆட்கள் தேர்வு இருந்தும் இதுபோன்று மோசடி தொடர்ந்து கொண்டிருக்கிறது. கள நிலவரம் எங்களுக்கு புரிகிறது. இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கக் முடியாது.
இந்த மோசடி கும்பலிடம் இந்தியர்கள் சிக்கி பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.