ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து தனது சிறப்புப் படைகளை விலக்கிக் கொள்ளவும், இரண்டு நாடுகளின் தரப்பிலிருந்தும் பீரங்கி தாக்குதல்களை நிறுத்தி வைக்கவும் பாகிஸ்தான் தரப்பில் சமாதான முயற்சி முன்வைக்கப்பட்டுள்ளது.

புலவாமா மற்றும் பாலகோட் தாக்குதல்களையடுத்து, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில், எல்லைப் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்காக, பாகிஸ்தான் தரப்பில் சமாதானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனது சிறப்புப் படைகளை விலக்கிக் கொள்ளுதல் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நிறுத்துதல் போன்றவை அடங்கும்.

இரு நாடுகளைச் சேர்ந்த ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர்கள் தொடர்ச்சியான தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அவர்களுக்கிடையே நடந்த கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.