பூமியில் இருந்து 2000 கி. மீ. க்கு கீழே உள்ள அனைத்து சுற்றுப்பாதைகளையும் உள்ளடக்கும் பூமியைச் சுற்றி யுள்ள வெளி விண்வெளிப் பகுதியில், சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் இதர ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்களின் சுற்றுப்பாதையாக விளங்கிவருகிறது, ஆனால் இந்த சுற்றுப்பாதைகள் மிக அபாயகர மான பகுதிகளாக மாறி வருகிறது.
பல பயனற்றப்பொருட்கள் விண் வெளிப்பாதையில் தேவையில்லாமல் சுற்றிவருகின்றன அதே சமயத்தில் பலனற்றி பால பாகங்களும் விண்வௌியில் சுற்றிவருவதால் விண்வெளியில் உள்ள விண்வௌி குப்பைகளை அமெரிக்கா ராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றது
பூமியில்தான் மனிதன் பொறுப்பில்லாமல் ஆண்டுக்கு 8 மில்லியன் டன் பிளாஸ்டிக்கு குப்பைகளை உருவாக்கித் தொலைக்கிறான் என்றால் விண்வௌியில் விண்வெளி குப்பைகளையும் உருவாக்கித்தொலைக்கிறான் மனிதன்
1978ம் ஆண்டு நாசாவின் விஞ்ஞானி திரு.டொனால்டு கேஸ்லர் என்பவர் உருவாக்கிய தாழ் கேஸ்லர் தியரியின் அடிப்படையில் பூமியின் தாழ் வட்டப்பாதையில் அடர்த்தி அதிகமாகிவுடன் ஒரு மோதல் சம்பவத்தின் ஆரம்பம் அடுத்தடுத்த மோதலின் ஆரம்பத்தினைக் குறிக்கும் என்கிறார், அதாவது விண் வௌியில் உள்ள ஏதேனும் ஒரு பாகம் ஏதேனும் ஒரு செயற்கைக்கோளின் மீதோ அல்லது இன்னொரு பாகத்தின் மீதோ மோதினால் அடுத்தடுத்த மோதல்கள் நிகழும் அபாயம் உள்ளது .
2009 ல் ரஷ்யாவில் செயல்பட்டுக்கொண்டிருந்த ஒரு செயற்கைக்கோளின் மீது ரஷ்யாவின் செயல்படாத ஒரு செயற்கைக்கோள் இரண்டும் மோதி விண்வெளியில் 2000 விண்வௌி குப்பைகளை உற்பத்தி செய்துவிட்டன
இந்த செயற்கைகோள் மோதல்கள் நடைபெற்ற தூரம் 789 கி.மீட்டர் உயரத்தில் ,
சீனா, பூமியில் இருந்து விண்வௌியில் உள்ள ஒரு செயற்கைக்கோள்களை தாக்கியதுபோதும் , இந்தியாவும் சமீபத்தில் ஒரு செயற்கைக்கோள் தாக்குதல் நிகழ்த்தியதையும்? அதனால் விண்வெளீி குப்பைகள் மேலும் அதிகமாகிவிட்டன என்பதையும் நாம் அறிவோம். இப்படி செய்யும்போது விண் வெளியில் ஒரு பாகம் ஏதேனும் ஒரு பாகத்தின் மீது மோதினால் பெரும் சிக்கல்கள்தான் நேரிடும்.
இதுபோன்ற விண்வெளி குப்பைகளை அமெரிக்கா இராணுவம் தொடர்ந்து கண்காணித்துவருகிறது, அதுவும் குறைந்த பட்சம் 10 செ.மீட்டர் உள்ள பொருட்களைத்தான் அவைகள் கண்காணித்து வருகின்றன, அதற்கு கீழ் உள்ள பொருட்களை கண்காணிக்க இயலாது.
இப்போதுள்ள செயற்கைக்கோள்களை பூமியில் வெகு தொலைவில் இருந்து பார்க்கும்போது பூமியைச் சுற்றி செயற்கைக்கோள்களே உள்ளன என்பதையும், பூமியை மறைக்க முயற்சிக்கின்றன என்பதையும் நாம் பார்க்கலாம்.
ஆனால் அதிவேக இணையத்திற்காக எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 12,000 செயற்கைக்கோள்களை ஏவ அனுமதி பெற்று இருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு வேலை செயற்கைகோள்கள் செயலிழந்தால் ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை டிவி , செல்போன் , வெப்பநிலை எதையும் நம்மால் அறிய முடியாது அதற்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும்
மனிதன் பூமியில்தான் பொறுப்பில்லாமல் இருக்கிறான் என்றால் விண்வௌியிலுமா
-செல்வமுரளி