போபால்:

கடந்த 2014-ல் இருந்த மோடி மோடி ஆதரவு நிலை தற்போது இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.


மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும்,காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் போபால் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த 1984-ம் ஆண்டிலிருந்து போபால் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.

தற்போது பாஜக வேட்பாளர் பிரக்யா தாக்கூரை எதிர்த்து திக்விஜய் சிங் போட்டியிடுகிறார்.

திக்விஜய் சிங்  இந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், போபால் தொகுதியில் போட்டியிடுவதில் எவ்வித அரசியல் முக்கியத்துவமும் இல்லை.
என் தலைவர் சொன்னார், நான் போட்டியிடுகிறேன்.

இது பாஜக 3 முறை வெற்றி பெற்ற தொகுதி. சவால் எனக்கு பிடிக்கும். கடந்த 1952-லிருந்து காங்கிரஸ் வெற்றி பெறாத ரெய்காரிலிருந்து போட்டியிட்டு நான் வென்றேன்.

கடந்த 2014-ல் இருந்த மோடி ஆதரவு போக்கு இப்போது இல்லை. சில தொகுதிளில் மட்டுமே மோடி ஆதரவு போக்கு கைகொடுக்கும்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவை தொகுதிகளில், 12 முதல் 16 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும் என்றார்.