திருச்சூர்:
திருச்சூர் பூரம் திருவிழா தலைமை யானை கலந்துகொள்ள தடை விதித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த நானை தற்போது நல்ல நலமுடன் இருப்பதாக கால்நடை மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக திருச்சூர் பூரம் திருவிழாவில் யானைகளின் அணிவகுப்பில் தலைமை யானையான ராமச்சந்திரன் கலந்துகொள்கிறது. அதன் தலைமையிலேயே இந்த ஆண்டும் யானைகள் அணிவகுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் நடைபெறும் “ பூரம் திருவிழா” உலக பிரசித்தி பெற்றது. 7 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இதில், நடைபெறும் யானைகளின் அணிவகுப்பு பார்ப்பதற்கு கண்கொள்ள காட்சியாக அமையும்.
இந்த ஆண்டு பூரம் திருவிழா மே-13ம் தேதி மற்றும் மே 14-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அப்போது அங்குள்ள வடக்குன்னாதர் கோயில் முன்புள்ள மைதானத்தில் கண்கவர் யானைகள் அணிவகுப்பு நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு யானை அணிவகுப்புக்கு தலைமை யானையாக கம்பீரமாக வலம் வரும் தெச்சிக்கொட்டுகாவு ராமச்சந்திரன் என்ற பத்தரை அடி உயர யானை பங்கேற்க மாநில அரசு தடைவிதித்ததால், மற்ற யானைகளின் உரிமையாளர்களும் தங்களது யானையை அழைத்து வர முடியாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, தேவசம்போர்டு அமைச்சர் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து, ராமச்சந்திரன் யானைக்கு கால்நடை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை நடத்தினர்.
இதில், ராமச்சந்திரன் யானை தற்போது நல்ல நலமுடன் இருப்பதாக கால்நடை மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.அ இதன் காரணமாக திருச்சூர் பூரம் திருவிழாவில் யானைகளின் அணிவகுப்பில் தலைமை யானையான ராமச்சந்திரன் கலந்துகொள்கிறது. இதன் காரணமாக இந்த ஆண்டும் பூரம் திருவிழா களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.