திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால் மீதும் அவரது நிர்வாகத்தின் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக் காலம் முடிந்த பிறகும் விஷால் தொடர்கிறார்.வைப்புநிதியாக உள்ள 7 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளார். பணியாற்றும் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தில் முறைகேடு நடந்துள்ளது” போன்ற எண்ணற்ற குற்றசாட்டுகள் முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அதன்படி, என்.சேகர் என்ற அதிகாரியை தயாரிப்பாளர் சங்கத்துக்கு தமிழக அரசு நியமித்தது. விசேஷ அலுவலரின் நியமனத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் .
இதுகுறித்து பேசியபோது நான் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டுமென்றால் ஐஸ்க்ரீம் தான் விற்க வேண்டும். சங்கத்தின் தலைவராக இருந்து உறுதியான முடிவுகளை எடுக்க முடியாது. மீண்டும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நான் நிற்பேனா என்பதில் சந்தேகமே. நான் எந்த காரியத்தையும் அரைகுறையாக விட்டதில்லை என்று மட்டும் சொல்ல முடியும்” என்று தெரிவித்துள்ளார் விஷால்,