விசாகப்பட்டினம்:

நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல்  போட்டியின் 2வது தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்ற நிலையில், அணியின் கேப்டன் தல தோனி, துணைகேப்டன் சின்னதல ரெய்னா வின் குழந்தைகள் மைதானத்துக்குள் அழைத்து வரப்பட்டனர்.

செல்லக்குழந்தைகளின் நடவடிக்கைகள் போட்டியை காண வந்த ரசிகர்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சியில் பார்த்து வந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் வியப்பையும், குழந்தைகளின் துடுக்கத்தை காணும் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

இது தொடர்பான போட்டோக்கள், தோனி தனது செல்லத்துடன் விளையாடும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சிஎஸ்கே தனது 100வது வெற்றியை பகிர்ந்து கொள்ளும் நிலையில், 8வது முறையாக இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

போட் முடிவடைந்ததும், பின் தன் செல்ல மகள் ஜிவா தோனியுடன் கேப்டன் தோனி மைதானத்தில் விளையாடிய போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தோனி தன் மகள் ஜிவா உடன் விளையாடிய போது சென்னை வீரர் ரெய்னா தனது மகள் கிராசியாவுடன் சேர்ந்து கொண்டார்.

பின் கிராசியா ரெய்னா, ஜிவா தோனி மைதானத்தில் தங்களின் டாடிக்களுடன் ஜாலியாக விளையாடினர். இந்த போட்டோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நேற்றைய ஆட்டத்தின்போது, தோனியின் மனைவி மற்றும் ரெய்னாவின் மனைவியும் தங்களது குழந்தைகளுடன் தனது அணியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி ஆட்டதை வெகுவாக ரசித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.