விசாகப்பட்டினம்:

நேற்று இரவு டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான போட்டியின்போது, சிஎஸ்கே பவுலரும், பிரபல சுழற்பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங்  ஐபிஎல் தொடரில் தனது 150 விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார். இதன் காரணமாக 150 விக்கெட்டுகளை கடந்த 3வது இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார்.

ஐபிஎல் தொடரின் 2வது குவாலிபையர் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஐபிஎல், அரங்கில் 10வது ஆண்டில் பங்கேற்கும் சென்னை அணி, 8வது முறையாக ஃபைனலில் முன்னேறியது.

இந்த ஆட்டத்தின்போது, டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள் 2 பேரை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.  நேற்றைய போட்டிக்கு முன்பாக ஐபிஎல்., அரங்கில் 148 விக்கெட் கைப்பற்றியிருந்த சென்னை வீரர் ஹர்பஜன் சிங், டெல்லி வீரர் ஷிகர் தவான், ரூதர்போர்டு வெளியேற்றினார்.

இதன் மூலம் ஐபிஎல்., அரங்கில் 150 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார்.  இதன் மூலம் ஐபிஎல்., அரங்கில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை கொல்கத்தா வீரர் ப்யூஸ் சாவ்லாவுடன் பகிர்ந்து கொண்டார்.

ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்களில் மலிங்கா முதலிடத்தில் உள்ளார். அவர் இதுவரை 167 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

அதைத்தொடர்ந்து இந்திய வீரர்கள்  அமித் மிஸ்ரா  157 விக்கெட் எடுத்தும், ப்யூஸ் சாவ்லா  150 விக்கெட்டும் எடுத்திருந்த நிலையில் தற்போது ஹர்பஜன் சிங்  150 விக்கெட்  எடுத்து சாதனை படைத்துள்ளார்.